கட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு கடந்த எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து தற்போது 1000க்கு மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்கள் வாகனங்களுடன் போராட்டதை நடத்தி வருகிறார்கள். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டநர்கள் ஒட்டாவாவின் நகரை முற்றுகையிட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.இந்த நிலையில் ஒட்டாவாவின் மேயர் ஜிம் வாட்சன் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’ நகரம் முற்றிலும் கட்டுப்பாட்டில் இல்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரை விட அதிகமாக உள்ளனர். போராட்டங்கள் குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.ஹார்ன்கள் மற்றும் சைரன்களை ஒலிப்பதன் மூலமும் பட்டாசுகளை வெடித்து விருந்துகளாக மாற்றுவதன் மூலமும் அவர்கள் அதிகளவில் உணர்ச்சியின்றி நடந்து கொள்கின்றனர். இது தலைகீழாக மாற்றப்பட வேண்டும். நாங்கள் எங்கள் நகரத்தை திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறினார்.மேயர் அவர் என்ன நடவடிக்கைகளை விதிக்கலாம் என்பது குறித்த குறிப்பிட்ட விபரங்களைத் தெரிவிக்கவில்லை.ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உதவ முற்படுபவர்களை கைது செய்வது உட்பட ஞாயிற்றுக்கிழமை பொலிஸ்துறை அவர்கள் அமுலாக்கத்தை முடுக்கிவிடுவார்கள்.அவசரகால நிலை முன்னணி பணியாளர்கள் மற்றும் அவசரகால சேவைகளுக்கு தேவையான உபகரணங்களுக்கான அணுகல் உட்பட நகரத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            