திருட்டை நிறுத்தினால் நாட்டின் கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும்- ஜே.வி.பி

 நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் தற்போதுள்ள கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின்  பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில்  திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதே எங்களது முதல் நோக்கமாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டுமன்றி ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.