வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு நிறுத்தம்!

பயிற்சி பெறாத மற்றும் உள்நாட்டு வேலைக்காக தனியார் வீசாவைப் பெறும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.