யாழில் குமார் சங்கக்காரவின் சிலை! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

 

சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டு வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்களே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றன. 

குறித்த சிலையானது மூன்றரை அடி உயரமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரின் முயற்சியில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த சிலையானது யாழ். பல்கலைக்கழகத்திற்காக உருவாக்கப்பட்டது எனவும் சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.