அமெரிக்காவில் கொலைக்குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 மணி நேரம் சமூக சேவை புரியுமாறு தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரின் ஸ்பெசர் எள்ற பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒமேலியா என்ற தனது ஆண் நண்பரை 108 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலைக்குற்றவாளியான குறித்த பெண் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் எனவும் சந்திக்க சென்ற நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுய கட்டுப்பாடை இழந்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் வென்சுரா நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடு இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் சிறை தண்டனை வழங்காமல், 2 வருட நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையிலும் மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.