இலங்கை உளவுத்துறையின் சதி போலி துவாரகா

2008 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர், அவ்வாண்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தேசிய தலைவர் ஆற்றிய உரையில் இளையோர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதாக குறிப்பிட்டிருந்தார். 

அதன் பிரகாரம் இளையோரை வைத்து மாவீரர் தின உரை போல ஒன்றினை உருவாக்கும் சந்தர்ப்பத்தை கச்சிதமாக இலங்கை உளவுத்துறை மேற்கொண்டுள்ளதாக அரசியல் பொருளாதார ஆய்வாளரான பாலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

 ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி மாவீரர் நாள் அன்று துவாரகா எனும் பெயரோடு வெளியான காணொளியானது பல்வேறு தரப்பினரிடையேயும் சர்ச்சைகளை ஏற்படுத்தி, இன்று உலக அரசியல் தளத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.