இலங்கையை வெளியேற்றியது உலகவங்கி



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலுக்குள் இதுவரை காலமும் இலங்கை உள்ளடக்கப்பட்டு வந்தது.

தற்போது நிலைமை சற்று மாற்றமடைந்து வருவதை அடுத்து உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி வெளியிடும் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த பட்டியலில் இருந்து நீக்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.

உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பணவீக்கம் அதிகரித்தபோது, ​​உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் இருந்தது. உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் உணவுப் பணவீக்கம் 47.6% ஆக உள்ளது.

உணவுப் பணவீக்கம் 261% ஆக இருப்பதால், உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் லெபனான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சிம்பாப்வே உள்ளதுடன் அங்கு 137% சதவீதம் பதிவாகியுள்ளது.