இலங்கை இனி திவாலான நாடு இல்லை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இலங்கையை திவாலான நாடு இல்லை என்றும் கடனை மறுசீரமைக்கும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை இந்த ஒப்புதல் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் கடனை மறுசீரமைத்து வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் அங்கீகாரமாக இது அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு, நாட்டின் வேலைத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இலங்கைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாத் துறை மீதான முதல் சுற்று கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடங்கி, இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.