பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இலங்கை- இந்தியா இணைப்பு அவசியம்: மிலிந்த மொரகொட



பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும், இந்தியாவிற்கும் செல்லும் பயணத்தை அதிகரிப்பதற்காக தரைப்பாலங்கள், பாலங்கள், குழாய்கள், மின்சாரம் கடத்தும் பாதைகள் மற்றும் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை உருவாக்கப்படவேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கும் அதன் அண்டை தீவுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கு நில இணைப்பு அவசியம்.

சுற்றுச்சூழல் கவலைகள் இருக்குமானால், இங்கிலாந்தில் இருந்து ஐரோப்பாவுக்கான சுரங்கப்பாதை போன்ற இணைப்புத் திட்டங்களையும் மொரகொட முன்மொழிந்துள்ளார்.

இந்தநிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத் தொடர்பின்போது, ராமர் சேது அல்லது தமிழ்நாட்டை மன்னார் தீவுடன் இணைக்கும் ஆதாம் பாலம் பயன்படுத்தப்படுமா? என்பது குறித்து கருத்து தெரிவிக்க உயர்ஸ்தானிகர் மறுத்துவிட்டார்.

தமிழ் பெரும்பான்மையான பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வுக்கான 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியா வெளிப்படுத்திய கவலைகள் தொடர்பில், இரண்டு நாடுகளின் கூட்டறிக்கையில் ஏன் கூறப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமருடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

இறுதியில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு 'இலங்கைக்குளேயே காணப்படவேண்டும் என்று மொரகொட குறிப்பிட்டுள்ளார்.