சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் இன்று (29) மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுடுள்ளார்.
அத்தோடு, குறித்த தீர்மானத்திற்கு மத்திய வங்கியும் இணக்கும் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைவாக எதிர்காலத்தில் முறையான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
பல்வேறு நபர்களை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, பணம் ஒரே நேரத்தில் வெளியேறாத வகையில் முறையாக தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.