இலங்கை ரூபா தொடர்பில் வெளியான அபாய அறிவிப்பு


ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் இலங்கை ரூபாவை உலகின் மிகவும் அபாயகரமான ஏழு நாணயங்களில் ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நாடுகளில் பண நெருக்கடி ஏற்படும் அபாயம் அதிகம் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஒரு நாட்டின் நாணய நெருக்கடி சாத்தியமா என்பதை தீர்மானிக்க, அந்நிய செலாவணி இருப்பு மற்றும் வட்டி விகிதங்கள் உட்பட எட்டு காரணிகளை நிறுவனம் கருதுகிறது.

அந்த வகையில், எகிப்து, ருமேனியா, துருக்கி, செக் குடியரசு, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பண நெருக்கடி அபாயம் உள்ள நாடுகளாக கணிக்கப்பட்டுள்ளன.