'கின்னஸ்' உலக சாதனை படைத்த சிறிலங்கா இராணுவம்

மருத்துவ சத்திர சிகிச்சை ஒன்றில் சிறிலங்கா இராணுவம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றி குறித்த கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த சத்திர சிகிச்சை கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட இந்த சிறுநீரகக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது.

கடந்த கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக்கல் 13 சென்றிமீற்றர் அளவில் 2004 இல் இந்தியாவிலும், அதிக நிறையான 620 கிராம் சிறுநீரகக்கல் 2008 இல் பாகிஸ்தானிலும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது.