இலங்கையின் மொத்த கடன் 100 பில்லியன் டொலரா.. ? சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்த திரைசேறி செயலாளர்

இலங்கையின் மொத்த கடன் 100 பில்லியன் டொலரை எட்டியுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகளுக்கு திரைசேறி செயலாளர்  மஹிந்த சிறிவர்தன விளக்கமளித்துள்ளார்.


கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய பொருளாதார போக்கு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க , திரைசேறி செயலாளர்  மஹிந்த சிரிவர்தன ஆகியோருடன்  நடத்தப்பட்ட விசேட நேர்காணலியே இந்த விடயம் வினப்பட்டது.

இந்த நேர்காணலை நெறிப்படுத்திய ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர்  நாயகம் தனுஷ்க ராமநாயக்க கேள்வியை இவ்வாறு முன்வைத்தார்

செலுத்த வேண்டிய கடன் தொகை தொடர்பில் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. நிதி அமைச்சு வெளியிட்ட 2024 கடன் என்ற அறிக்கை அதற்கமைய 2023 டிசம்பர் இறுதியில்  இலங்கையின் மொத்க் கடன் தொகை 96 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மார்ச் இறுதியில் இலங்கையின் மொத்தக் கடன் 100 பில்லியன் டொலர் என்று குறிப்பிடப்படுவதில் இருந்தே இந்தப் விவகாரம் எழுந்தது. 70 பில்லியனில் இருந்து 100 பில்லியனாக அதிகரித்ததாக சிலர் விளக்கம் கொடுத்தனர். இடைப்பட்ட காலத்தில் கடன் பெற்றதாகவும் அது எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டது. உங்கள் பதில் என்ன?

இதற்கு பதிலளித்த திரைசேறி செயலாளர்  மஹிந்த சிறிவர்தன

 2024 மார்ச் மாதமளவில் கடன் நிலைமையை கடன் அறிக்கையின் ஊடாக வெளியிட்டோம். அதில் உள்ள ஒரு அட்டவணையில் 100 பில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதுவும் சரியானது தான். முழுக் கடன்தொகையும் அமெரிக்க டொலர்களிலே பெறப்பட்டுள்ளது.  ஆனால் உள்நாட்டுக் கடன், வெளிநாட்டுக் கடன் என்பன பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டுக் கடன்கள் பொதுவாக டொலர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
உள்நாட்டுக் கடனை அந்த அட்டவணையில் சேர்க்கையில் அவை டொலர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. டொலர்களுக்கு மாற்றுகையில் முன்பிருந்த அந்நியச் செலாவணி பெறுமதி 325 ரூபாய்.
 
பெறுமதி மாற்றுகையில் ரூபாவின் பெறுமதி 301 ஆகும். அது நல்ல நிலைமையாகும். 325 ரூபாவினால் கணிப்பிட்டதை 301 ரூபா என்ற அடிப்படையில் கணிப்பிடுகையில்  ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது.
 
 வெளிநாட்டுக் கடன் தொகையை சேர்க்கையில் நாம் கடன் பெறாத போதும் அந்நியச் செலாவணி  மாற்று விகிதத்தின் வீழ்ச்சியானது  டொலர்களில் அதிகரித்துக் காட்டும்.  

கடன் பெறாமல் நாட்டை நிர்வகிக்கலாம் என்று  யாராவது சொன்னால் அதனை ஏற்க முடியாது. கடனை நுகர்வுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் கடனை, , சரியான, செயற்திறன் மிக்க, பயன்மிக்க பொருளாதார விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
 
 அவ்வாறு பயன்படுத்தி, முதலீடுகளை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டால் தான் கடனைத் திருப்பிச் செலுத்தும் இயலுமையை அதிகரித்துக்கொள்ளலாம். அதனைத் தான் நாம் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.