Spider Man: No Way Home படத்தின் உலகமுழுவதும் வசூல் எத்தனை கோடியா?

உலக சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த படம் Spider Man: No Way Home ஆக தான் இருக்க முடியும். கடந்த மாதம் 16 ஆம் திகதி வெளியான இப்படம் முதல் நாளே பெரியளவில் வசூல் சாதனைகளை  படைக்க தொடங்கியது. இப்படம் வெளியான 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 10,200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இந்தியாவில் மட்டும் 260 கோடி வசூலாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படங்களில் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.