முன்னணி படங்களுக்கு இணையான ஸ்பைடர் மேன் நோ வெய் ஹோம் வசூல்

உலகமக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த திரைப்படம் என்றால் ஸ்பைடர் மேன் நோ வெய் ஹோம் ஆக தான் இருக்க முடியும். MUC தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை வெளியான முந்தைய ஸ்பைடர் மேன் படங்களையும் விடவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி இந்தியாவிலும் 17 ஆம் திகதி உலகம் முழுவதிலும் வெளியான அதிக வசூல் பெறட்டுள்ளது. இதுவரை வெளியான ஸ்பைடர் மேன் படங்களை விட இப்படம் அதிக வசூல் பெற்றுள்ளது. அதன் படி 1 பில்லியனுக்கு மேல் உலகம் முழுவது வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதது. ஸ்பைடர் மேன் நோ வெய் ஹோம் தமிழகத்தில் மட்டும் 11 நட்டக்கல்லில் 29 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் 30 கோடி வசூல் தாண்டிவிடும் என கூறப்டுகின்றது.