நாட்டிற்கு வரும் இஸ்ரேலிய (Israel) பிரஜைகளின் பாதுகாப்பு தேவைக்காக விசேட தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
0718 - 592651 என்ற இலக்கத்தினூடாக சுற்றுலா மற்றும் கடல்சார் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீயை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நாட்டில் நேற்றையதினம் (23), வெளிநாட்டு பயணிகள் அறுகம்பை குடாவிற்கு (Arugam bay) செல்வதை தவிர்க்குமாறு தகவல் வெளியாகியிருந்தது.
அதனை தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், சில சுற்றுலாப் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்புக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் | Special Measures For Israeli Citizens Safety
எனினும் அவ்வாறான எந்த அசம்பாவித சம்பவங்களும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், இந்த நாட்டில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் 7ஆம் திகதி அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு பிரிவால் இலங்கை பாதுகாப்பு புரிவிற்கு தகவல் கிடைத்தது என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் இஸ்ரேலியர்கள் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கை பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.