பைடனை தொடர்ந்து உக்ரைன் சென்றுள்ள மற்றுமொரு அரச தலைவர்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசர பயணமாக உக்ரைனுக்கு சென்றுள்ளார்.

ஒரு வருடமாக யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது தான் உக்ரைனுக்குள் காலடி எடுத்து வைத்ததாக கூறும் ஸ்பெயின் பிரதமர், ஸ்பெயின், ஐரோப்பாவில் அமைதியை ஏற்படுத்தும் நட்சத்திரங்களான உக்ரைனையும் அதன் மக்களையும் ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் விஜயம் முடிந்து சில நாட்களிலேயே ஸ்பெயின் பிரதமரின் திடீர் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.