செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதபுதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஏற்கனவே அவர் செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள்வரை புதைக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.
செம்ணியில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பிலான குற்றவாளிகள் தொடர்பில் தனது கணவர் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரவுக்கு சோமரத்ன ராஜபக்ஷ மனைவி கடிதம் எழுதியதாக ஊடகங்களில் பார்த்தேன்.
எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார்.
ஆகவே அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.