2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
அந்தவகையில், யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி(Kilinochi) வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றது.
வீதியில் பயணித்த பொதுமக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதன்போதே, வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் பெற்றுப் பருகியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு - கிழக்கில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.