சிம்பு கண்ணீர் விடுவதைப் பார்க்க வேண்டும்-கமல்!

நடிகர் சிம்பு ஆனந்தக் கண்ணீர் விடுவதைப் பார்க்க வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், ஜீவா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘ வெந்து தணிந்தது காடு என்கிற பாரதியாரின் வரி எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் படங்களை தூக்கி நிறுத்துவதும் கெடுப்பதும் தமிழ் படங்களேதான். நல்ல சினிமாவைக் கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். சிம்பு கடினமான உழைப்பாளி. இப்படத்தின் வெற்றிவிழாவில் அவர் ஆனந்தக் கண்ணீர் விடுவதை நான் காண வேண்டும்’ எனக் கூறினார்.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.