இன்று சிம்புவிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சரியான ஹிட் கிடைக்காத சிம்புவுக்கு மாநாடு படம் வெற்றியை கொடுத்தது . தற்போது பத்து தல,வெந்து தணிந்த காடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதக்காக   கவுரவ டாக்டர் பட்டம்  வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது.இந்நிலையில்  இன்று இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இவரின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.