மணிரத்தனம் படத்தில் ஹீரோவாகும் சித்ஸ்ரீராம்

மணிரத்தனம் இயக்கிய கடல் பாடகராக அறிமுகமானவர் சித்ஸ்ரீராம். அதன் பிறகு சினிமாவில் பிரபல பாடகராக ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ள மணிரத்தனம் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமடைந்துள்ளார். அதோடு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு முன்பாக இண்னொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்தனம் அந்த படத்தின் நாயகனாக நடிக்க சித்ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.