நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என கூறியுள்ளார்.
மேலும், தென் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த நான்கு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அம்பலாங்கொடை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை சமாளிக்க இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இலங்கையின் பல பகுதிகளில் பதிவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது.
எனினும் அதனால் தேசிய பாதுகாப்பிற்கு பெரிய தாக்கம் இல்லை. எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.