அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்தின், மினியாபொலிஸ் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று (31) குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறித்த நபரும் உயிரிழந்தார்.
இதன்படி, 3 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன