பொரளையில் துப்பாக்கிசூடு - பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!


2014ஆம் ஆண்டு கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கே.எம். சரத் பண்டார எனப்படும் எஸ்.எப். சரத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அத்துடன், குறித்த வழக்கின் இணை குற்றவாளிகளாக கருதப்பட்ட தெமட்டகொட சமிந்த என அழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 01ஆம் திகதி பொரளை வனாத்தமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு நிலையமொன்றில் வைத்து ஹெட்டியாராச்சி துமிந்த என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து, எஸ்.எப். சரத் மற்றும் தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது