ஜேர்மனியில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு-தன்னைத் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட துப்பாக்கிதாரி!

தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.அத்துடன் துப்பாக்கிதாரியும் தன்னைத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக மன்ஹெய்ம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (திங்கட்கிழமை) பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.இதன்போது படுகாயங்களுக்குள்ளான பெண், சில மணி நேரங்களிலேயே இறந்துவிட்டதாக பேடன்-வூர்ட்டம்பெர்க் மாநில உட்துறை அமைச்சர் தாமஸ் ஸ்ட்ரோப்ல் தெரிவித்தார்.துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 18 வயதான ஜேர்மன் உயிரியல் மாணவர், அவர் நாட்டில் இதற்கு முன்பு எந்த குற்றப் பதிவும் இல்லாதவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சற்று முன்பு வாட்ஸ்-அப் குறுஞ்செய்தியை அனுப்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதில், ‘மக்கள் இப்போது தண்டிக்கப்பட வேண்டும்’ என்றும் அவர்களை கடலில் புதைக்கப்பட விரும்புவதாகவும் மன்ஹெய்ம் பொலிஸ்துறைத் தலைவர் சீக்பிரைட் கோல்மர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.ஹைடெல்பெர்க், பிராங்பேர்ட்டின் தெற்கே அமைந்துள்ளது மற்றும் சுமார் 160,000 மக்களைக் கொண்டுள்ளது. அதன் பல்கலைக்கழகம் ஜேர்மனியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 1386ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹெய்டெல்பெர்க் ஜேர்மனியின் பழமையான பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்தின் நியூன்ஹைமர் ஃபெல்ட் வளாகத்தில் இயற்கை அறிவியல் துறைகள், பல்கலைக்கழக கிளினிக்கின் ஒரு பகுதி மற்றும் தாவரவியல் பூங்கா உள்ளது.