ஆர் .ஜே பாலாஜி படத்தில் ஷிவானி நாராயணன்

காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே பாலாஜி எல்கேஜி கதாநாயகனாக நடித்தார். அதற்கு பிறகு மூக்குத்தி அம்மன் என்ற படத்தை நயன்தாராவை வைத்து இயக்கி நடித்தார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி ,பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வரும் ஷிவானி ,பொன்ராம் இயக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.தற்போது மூன்றாவதாக ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.