மூச்சற்ற நிலையில் தாயிடம் சென்ற சாந்தன்! கதறலுடன் வரவேற்ற தாய் - VIDEO

புதிய இணைப்பு

சாந்தனுடைய திருவுடல் ஆராத்தி எடுத்து அவரது வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Video link

https://youtube.com/shorts/RD3fMzuqw84?si=u_63Iv7fh7oEm4ta

அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது சகோதரியார் ஆராத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.  

சாந்தனின் பூதவுடலைப்பார்த்து அவரின் தாய் கதறியழுத காட்சி அனைவரது நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.

சாந்தன் இறந்த செய்தி கூட அறியாது,மகன் வருவான் என அவரின் தாய் 33 வருடமாக காத்திருந்தாள்.

இந்நிலையில் உயிருடன் வருவான் என நினைத்த மகனின் உடலை பார்த்த தாயின் கதறல் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 இரண்டாம் இணைப்பு

தற்போது சாந்தனின் பூதவுடலானது யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் வைக்கப்பட்டுள்ளது.

பெருதிரளான மக்கள் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இறுதிகிரியைகளுக்காக சாந்தனின் தாயாரின் வீட்டிற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.


முதலாம் இணைப்பு

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் - கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.

தமிழத்தில் உயிரிழந்த சாந்தனின் உடலானது இன்று பொது மக்களின் அஞ்சலிக்காக  தமிழர் தாயகப்பகுதிக்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி, சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.


 இறுதிக்கிரியை 

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை திங்கட்கிழமை(04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன