விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடிய எழுவர் முல்லைத்தீவில் கைது



முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடிச்சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை பூமிக்கு அடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் புதுக்குடியிருப்பு காவல்துறை உத்தியோகத்தர்கள் குழு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் சோதனை நடத்தி இக்குழுவினரை கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பல கருவிகள் மற்றும் காரொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தை சேர்ந் தவர்களெனவும், ஏனைய சந்தேக நபர்கள் அனைவரும் ஜாஎல, நீர்கொழும்பு, வெல்லம் பிட்டி மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த வர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.