புஷ்பா படத்தை பாராட்டிய செல்வராகவன்

தெலுங்கு முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் 4 மொழிகளில் வெளியாகியது. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிமந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் பெற்றது. இந்த படைத்ததுக்கு திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரபல இயக்குனரான செல்வராகவன் புஷ்பா படத்தை பாராட்டி இருக்கிறார். அந்த வகையில் வாவ் சூப்பர் திரைப்படம். இந்த படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக தங்களது பணிகளை செய்துள்ளனர்.மேலும் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் நான் அடிமையாகிவிட்டேன்.