வெல்லம்பிட்டிய, வேரகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கொங்கிரீட்டில் ஆன நீர்க்குழாய் தொகுதி வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் வெல்லம்பிட்டிய வேரகொட கனிஸ்ர வித்தியாலயத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த ஐந்து மாணவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.