எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு!

முட்டை உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே  உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க இதனை தெரிவித்தார்.

இதன் காரணமாக தற்போது சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.