சர்வதேச மாநாட்டில் உரையாற்றியவேளை சரிந்து வீழ்ந்து உயிரிழந்த தூதுவர் (காணொலி)

சர்வதேச மாநாடொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சவுதி தூதுவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தமை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆபிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani) என்பவரே இவ்வாறு திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்வராவார்.

ஓகஸ்ட் 8ஆம் திகதியான திங்களன்று எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆபிரிக்க மாநாட்டில் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின்(Abdel Fattah al-Sisi) சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்து முகமது ஃபஹத் அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani)உயிரிழந்துள்ளார்.

இந்த உரையில் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியை (Abdel Fattah al-Sisi) மனிதகுலத்தின் டீன் மற்றும் அமைதியான மனிதர் என அல்-கஹ்தானி விவரித்து இருந்தார்.