பிரித்தானிய யாத்ரீகர்களுக்கு ஹஜ் முன்பதிவு முறையை சரிசெய்வதாக சவுதி அரேபியா உறுதி!

பிரித்தானிய யாத்ரீகர்கள் விமானங்கள் மற்றும் விசாக்கள் இல்லாமல் தவிப்பதால் ஹஜ் முன்பதிவு முறையை சரிசெய்வதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.

தனது புதிய பயண முறைமையின் தொழில்நுட்ப சிக்கல்கள் பலரின் திட்டங்களை சீர்குலைத்ததால், இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு பயணிக்கும் யாத்ரீகர்களுக்கு மாற்று விமானங்களை ஏற்பாடு செய்வதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.பிரித்தானிய முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணத்துக்காக, ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலுத்தியதாகவும் ஆனால் விமானங்கள் அல்லது விசாக்கள் இல்லாமல் தவித்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவிற்கு பயணிக்க விரும்பும் யாத்ரீகர்களுக்கு மாற்று விமானங்கள் மற்றும் கூடுதல் இருக்கைகளை, பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘இது ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான உடனடி விசாக்களை வழங்குவதையும் உறுதி செய்கிறது. குறைந்த இருக்கை திறன் மற்றும் மின்னணு பயண முறைமையை பயன்படுத்தும் யாத்ரீகர்கள் அனுபவிக்கும் தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொள்கிறது.’ என ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது.இந்த மாதத்தின் தொடக்கத்தில் மற்றும் ஹஜ் புனித பயணம், தொடங்குவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் இஸ்லாமிய யாத்திரையான ஹஜ்ஜை தானியக்கமாக்குவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் சவுதி Motawif என்ற புதிய பயண முறைமையை அறிமுகப்படுத்தியது.

பொதுவாக வருடத்திற்கு 25,000 யாத்ரீகர்களுக்கு பயணத்தை ஏற்பாடு செய்யும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பயண ஏற்பாட்டாளர்களை இந்த புதிய பயண முறைமை குறைக்கிறது.