‘கஞ்சா சாப்பிட்டு சாகலாம்’ -இதுதான் இவர்களது நோக்கம் என்கின்றார் சரத் பொன்சேகா!

கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்க முயற்சி செய்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.கஞ்சாவை ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய நிபுணர்களு குழு நியமிக்கப்படும் என 2023ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட உரையில் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, மக்களை போதையில் இருக்கச் செய்து விட்டு போராட்டம் இடம்பெறுவதை தடுப்பதே நோக்கம் என்றார்.கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, அதை உட்கொண்டு இறக்கும்படி மக்களை வலியுறுத்தும் செயற்பாடே இதுவென சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்