சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் : விசாரணைக்குழுவில் அம்பலமான தகவல், பாயப்போகும் சட்டம்



சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்து அமைச்சர்,

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரத்தை ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, சுங்க அதிகாரிகளின் தரப்பில் ஆய்வு தொடர்பான சில தவறுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளதுடன், அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தேவையான தீர்மானங்களை எடுப்பார்.

இந்தக் குழுவின் மூலம் சில முக்கிய காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் இலங்கை சுங்கத் தரப்பில் குறைபாடும் தவறும் ஒன்றாகும்.

இது தொடர்பில் சுங்கத்திணைக்கள அமைச்சரும் அமைச்சகச் செயலாளரும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.”

மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் போலி செய்திகள் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளை அமைச்சர் ரத்நாயக்க சாடியுள்ளார்.


இதேவேளை, சுங்க சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய 323 கொள்கலன்களின் உள்ளடக்கங்களை தன்னால் வெளியிட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் எங்கிருந்து வந்தன, எந்த நாட்டிலிருந்து வந்தன என்பதை முழுமையாக கூறமுடியம் என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.