தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு இரா.சம்பந்தன் பொருத்தமற்றவர் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் (P. Ayngaranesan) தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாங்கள் சரியான முறையில் போராட்டத்தினுடைய ஞாயப்பாடுகளை எடுத்துச் சென்றிருந்தால் மக்கள் ஒத்துழைப்பை வழங்கி இருப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை, நாங்கள் யதார்த்தத்திற்கு புறம்பாக செயற்படுகிறோம் என நினைத்து மக்கள் விலக ஆரம்பித்துள்ளனர்.
இது தமிழ் தேசியத்திற்கு பெரும் பின்னடைவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.