டாப் நடிகருடன் நடித்த சமந்தா

தென்னிந்தியா திரையுலகின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. புஷ்பா படத்தில் அவர் நடனம் ஆடியப்பாடல்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவரின் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதன் படி அவர் நடிப்பில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது பாலிவுட் டாப் நடிகர்களுடன் சமந்தா விளம்பரம் ஒன்றை நடித்துள்ளார். நடிகர் அக்ஷ்ய் குமாருடன் ஹிந்தியில் விளம்பரத்தை நடித்துள்ளார். அந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.