மீண்டும் ஹிந்தி வெப் சீரிஸில் சமந்தா

ராஜ், டி.கே என்ற இரட்டையர்கள் இயக்கிய தி பேமிலிமேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தில் இலங்கை பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா .அந்த தொடர் மிக பெரிய விமர்சனங்களை சந்தித்தது. அத்தோடு அந்த தனிப்பட்ட தொடரில் சமந்தா நடித்ததால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்ப்படுத்தியது என்றும் செய்திகள் வெளியாகி வந்தன.இந்த நிலையில் நாக சைதன்யாவை  பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய சமந்தா தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில்  அடுத்த படியாக மீண்டும் ராஜ் மற்றும் டிகே  இயக்கும் ஹிந்தி வெப் தொடரில் நடிப்பதற்கு சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக பாலிவுட்  செய்திகள் வெளியாகியுள்ளன.