ரணிலின் கைதை ஜூலியஸ் சீசருடன் ஒப்பிட்ட சாலிய பீரிஸ் : பதிலடி கொடுத்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  தனது முகநூல் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு  அமைச்சர் பிமல் ரத்னாயக்க பதிலடி வழங்கியுள்ளார்.

 
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வெளியிட்டுள்ள அந்த பதிவில்
 
”ரூபிகானைக் கடப்பது, கி.மு 49 ஜனவரியில், ரோமில் உள்ள செனட்டின் உத்தரவுகளை மீறி, கவுலின் ஆளுநர் ஜூலியஸ் சீசர் தனது இராணுவத்துடன் ரூபிகானைக் கடந்தார்.

ரூபிகானைக் கடந்தவுடன், திரும்பிச் செல்வது சாத்தியமில்லை. அதுதான் திரும்பப் பெற முடியாத புள்ளி. அது ஒரு உள்நாட்டுப் போருடனும், ஜூலியஸ் சீசரின் இறுதி வெற்றியுடனும் முடிந்தது.

இந்த சம்பவம் ரூபிகானைக் கடப்பது அல்லது திரும்பப் பெற முடியாத புள்ளியைக் கடப்பது என்ற சொற்றொடருக்கு வழிவகுத்தது.

அரசியலிலோ அல்லது நிர்வாகத்திலோ சில தருணங்கள் உள்ளன, அவை ரூபிகானைக் கடக்கும் தருணங்கள் அல்லது திரும்பப் பெற முடியாத புள்ளியாகும்.

அந்த முடிவுகள், நாட்டின் நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டு, புத்திசாலித்தனமாகவும், மனதில் கொண்டும் எடுக்கப்பட்ட முடிவுகளாகக் கருதப்பட வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபோது, கி.மு 49 இல் ஜூலியஸ் சீசர் ரூபிகானைக் கடந்த வரலாற்றுக் குறிப்பை மேற்கோள் காட்டி ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க பதிவென்றை வெளியிட்டுள்ளார்.
 
அந்த பதிவில் , இந்த நாட்டு மக்கள்தான், 11 மாதங்களுக்கு முன்பு, ரூபிகானைக் கடந்தார்கள் எனவும், இலங்கையை உண்மையான குடியரசாக மாற்றும் இயக்கத்தின் முன்னணியில் இருப்பவர்கள் அவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சாலிய பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கள் நாடு முழுவதும் வலுவான அரசியல் எதிர்வினைகளை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.