தமிழ் மக்களை ஏமாற்றும் சஜித் அணி - வீடு வழங்குவதாக கூட்டத்துக்கு அழைக்கப்படும் மக்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான தேர்தல் கூட்டங்களுக்கு வீடு வழங்குவதாக மக்களை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளார் அறிமுக கூட்டங்கள் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது பட்டிருப்பு தொகுதிக்கான கூட்டம் மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்து பேருந்துகள் மூலம் வெளி கிராமங்களில் இருந்து மக்களை வர வைத்து இரவு 7 மணியின் பின் சஜித் பிரேமதாசவின் வருகையினால் பசியினால் வாடிய மக்களுக்கு தமிழரசு கட்சியின் பட்டிருப்புகிளை இரவு உணவு வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேபோன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்த கூட்டம் மழை காரணமாக வெளி இடங்களில் இருந்து மக்கள் தாமதமாக வந்ததால் கூட்டம் 12 மணிக்கு நடந்துள்ளது.

தனக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை தெற்கிக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துகாட்ட முனைந்த சஜித் பிரேமதாசா, மக்கள் வர தாமதமானதால் தனது கோபத்தை ஊடகவியலாளர்கள் மீது காட்டி சென்றுள்ளார்.

பிரேமதாச என்பவர்கள் மக்களுடன் நெருங்கி இருக்கின்றவர்கள் என்று கூறினாலும் சஜித் அவர்களின் நடவடிக்கை சிங்கள மக்களுக்கு ஒரு முகத்தையும் தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் மறைமுகமாக காட்டுவதாகவே அவரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

இதுபோன்று இரட்டைவேடம் போடும் அரசியல் தலைவர்களிடம் இருந்து தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் தொடர்பாக என்ன பதிலை எதிர்பார்க்க முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.