கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்


வேலை வாய்ப்புகள், ஆதரவு சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் என்பன ஒரு நகரத்தில் குடியேறுவதற்கு அல்லது விடுமுறையை கழிப்பதற்கான முக்கிய அம்சங்களாகும்.

அந்த அம்சங்களில் முக்கியமானதாக கருதப்படுவது பாதுகாப்பு ஆகும்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் கனடாவில் (Canada) குடியேறுவதற்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் ஒன்றை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலானது, நகரங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களின் தீவிரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் ஓக் பே நகரம் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

அந்த நகரத்தில் குற்றச் செயல்களின் தீவிரத்தன்மை 27.5 புள்ளிகள் என்ற அடிப்படையில் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, இரண்டாவது பாதுகாப்பான நகரமாக பிலெய்ன்வில் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு குற்றச் செயல்களின் தீவிரத்தன்மை புள்ளிகள் 28.3 என பதிவாகியுள்ளது.

மூன்றாம் நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் அரோரா நகரம் இடம்பெற்றுள்ளதுடன் குற்றச் செயல்களின் தீவிரத்தன்மை புள்ளிகள் 34.2 குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனாடாவில் பாதுகாப்பான நகரங்களாக தெரிவு செய்யப்பட்ட நகரங்களின் தரவரிசை பட்டியல் பின்வருமாறு..

Oak Bay, British Columbia

Blainville, Quebec

Aurora, Ontario

LaSalle, Ontario

Burlington, Ontario

Lévis, Quebec

Markham, Ontario

Quebec City, Quebec

Richmond Hill, Ontario

Ottawa, Ontario