உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம்!

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டெனெட்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம் மேற்கொண்டுள்ளார்.உக்ரேனிலிருந்து கருங்கடல் தீபகற்பம் இணைக்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி கிரிமியாவிற்குச் சென்ற ஒரு நாளுக்குப் பின்னர் இந்த விஜயம் அமைந்துள்ளது.

கருங்கடல் துறைமுக நகரமான செவஸ்டோபோலுக்கு அவர் சென்றதாகவும் அவருடன் மொஸ்கோவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் ஆளுநரும் பயணம் செய்திருந்ததாகவும் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.உக்ரைன் மற்றும் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத வாக்கெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா 2014 இல் கிரிமியாவை இணைத்துக்கொண்டது.

இருப்பினும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகள் மற்றும் தீபகற்பத்தில் இருந்து வெளியேற வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி கடந்த ஆண்டு முதல் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.