95 பயணிகள் மற்றும் விமான ஓட்டிகளுடன் சென்ற ரஷ்ய(russia) விமானம் துருக்கியின் (turkey)தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகளுடன் சென்றபோது நிகழ்ந்த அனர்த்தம்
சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அஜிமுத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சோச்சியில் இருந்து 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது
விமானம் தரையிறங்கியதும் விமானி அவசர அழைப்பு கொடுக்க விமான நிலைய மீட்புக்குழு, தீயணைப்புப்படை வீரர்கள் விரைவாக வந்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் இருந்து விமானத்தை அப்புறுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதுவரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.