ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யாவினால் ஏவப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட 40 "ஷாஹத்" ஆளில்லா விமானங்களில்(ட்ரோன்) 30 ஐ உக்ரைனின் விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

மத்திய வின்னிட்சியா பகுதியில் 20 ஆளில்லா விமானங்களும், தெற்கில் உள்ள ஒடேசா மற்றும் மைகோலைவ் பகுதிகளில் 10 விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

இந்நிலையில் ரஷ்யா தொடர்ச்சியாக உக்ரைனின் துறைமுக வசதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், டானூப் மற்றும் ஒடேசா துறைமுகத்தில் உக்ரேனிய தானிய ஏற்றுமதி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட ஒன்பது ஏவுகணைகளை ரஷ்ய வான் பாதுகாப்பு மையம் அதன் மேற்கு பெல்கோரோட் பிராந்தியத்தில் வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.