கொதிநிலையில் ரஸ்யா - உக்ரைன் போர்..! 400 ஈரானிய ட்ரோன்கள் மூலம் பாரிய தாக்குதல்


ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதற்கிடையே ரஸ்யா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஸ்யாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஸ்யா தீவிரப்படுத்தியது.

ஆளில்லா டிரோன்கள் மூலம் உக்ரைனின் முக்கியப் பகுதிகளில் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் அக்டோபர் 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 காமிகேஸ் வகை 400 டிரோன்கள் மூலம் உக்ரைனின் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக அதிபர் ஸெலென்ஸ்கி நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.