முடிவுக்கு வருகிறது ரஸ்யா உக்ரேன் போர் : ஜெலென்ஸ்கி அறிவிப்பு


அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில், ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர உறுதிபூண்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையிலான மூன்று ஆண்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதற்காக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேரில் அழைத்து பேசிய அவர், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி போரை நிறுத்துமாறு கூறினார்.

இதனால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி பாதியிலேயே வெளியேற, கனிம வளம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

அதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் உக்ரேனுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனிம வள ஒப்பந்தம் தொடர்பாகவும், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.