உக்ரைனில் தனது தரப்புக்களை வெளியேற்றும் ரஷ்யா - ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!


உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை அண்மித்த பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது தரப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால், குறித்த இடங்களில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அனைத்துலக அணுசக்தி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதியில் உக்ரைனிய படையினர் வான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதுடன், அப்பகுதிகளில் உள்ள சிறுவர்கள், முதியோர்களை கொண்டுள்ள ரஷ்ய குடும்பங்களை வெளியேறும்படி ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துலக அணுசக்தி அமைப்பின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

அதேசமயம், உக்ரைனின் மைக்கொலைவ் பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று அதிகரித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொழில்துறை வட்டாரங்களை குறிவைத்து ரஷ்யாவின் தாக்குதல்களை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.