17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கிய ரஷ்யா!

உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, உக்ரைன், சுவிஸ்லாந்து, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூஸிலாந்து, நோர்வே, தாய்வான், சான் மரினோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நீக்கப்பட்டுள்ளன.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷ்ய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது.அதுமட்டுமல்லாமல், மேற்குறித்த 17 நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்ததோடு, உக்ரைனுக்கு ரஷ்ய துருப்புக்களை எதிர்கொள்வதற்காக இராணுவ உதவியும் வழங்கியது.