எஸ்தோனியாவின் பிரதமரை தேடப்படுவோர் பட்டியலில் இணைத்துள்ள ரஷ்யா

உக்ரைன் நாட்டின்  தீவிர ஆதரவாளரான எஸ்தோனியாவின் பிரதமர் காஜா காலசினை ரஷ்யா தேடப்படும் நபர் எனஅறிவித்துள்ளது.

குற்றவியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை ரஷ்யா தேடப்படும் நபராக அறிவித்துள்ளததாக குறிப்பிட்டிருந்தது.

எஸ்தோனியாவின் கலாசார அமைச்சர் உட்பட வேறுசில முக்கிய அதிகாரிகளையும் ரஷ்யா தேடப்படுபவர்களின் பட்டியலில் இணைத்துக்கொண்டுள்ளது. 

வரலாற்று நினைவுகளை அவமதித்தமைக்காகவே இவர்களை தேடப்படுபவர்கள் பட்டியிலில் இணைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சோவியத்யூனியனின் போர் வீரர்களின் நினைவுச்சின்னங்களை அழித்தமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா சுமத்தியுள்ளது என ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கை தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என எஸ்தோனிய பிரதமர் தெரிவித்துள்ளார். 

நான் சரியான விடயங்களைச் செய்கின்றேன் என்பதை இது இன்னமும் வலுவாக நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உக்ரைனிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெரும்வெற்றி பெற்றுள்ளது எனவும் இது ரஷ்யாவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை என்னை மௌனமாக்கும் என கிரெம்ளின் கருதுகின்றது ஆனால் அது நடைபெறாது, மாறாக இது உக்ரைனிற்கான எனது ஆதரவை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.